மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் கேரள தலைநகரில் கம்யூனிஸ்ட் பாஜக இடையே கடும் போட்டி வெற்றி யாருக்கு?
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் கேரள தலைநகரில் கம்யூனிஸ்ட் பாஜக இடையே கடும் போட்டி வெற்றி யாருக்கு?
கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதன்படி 8-ந் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ந் தேதி நடந்த 3-வது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவானது.

தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 244 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் எழுந்துள்ளது காரணம் இந்த மாநகராட்சியில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது தற்போதைய நிலவரப்படி – கம்யூனிஸ்ட் – 21, பாஜக 14, காங்கிரஸ் – 3 மற்றவை -2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன , கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக அதிக இடங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் முன்னிலை வகிக்கிறது தற்போதைய சூழலில் திருவனந்தபுரம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருவனந்தபுரத்தில் மொத்தம் 100 வார்டுகள் இருப்பதால் 51 இடங்களை கைப்பற்றும் கட்சி மேயராக வெற்றி பெரும்.