மிக பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக வெற்றி பெற்ற உடனே செய்த சிறப்பான சம்பவம் கதறும் கம்யூனிஸ்ட்கள் !!!
மிக பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக வெற்றி பெற்ற உடனே செய்த சிறப்பான சம்பவம் கதறும் கம்யூனிஸ்ட்கள் !!!
கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது நிலையில், முடிவுகள் இன்று மாலை 6 மணிக்குள் முழு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2021’இல் கேரளாவில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னூட்டமாக இந்த தேர்தல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில்.,

தற்போது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் மற்றும் பாஜக தலைமையில் ஒரு அணியும் என மூன்று பெரும் அணிகளாக பிரிந்து போட்டியிட்டன.
டிசம்பர் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக 941 கிராம பஞ்சாயத்துகளில் 15,962 வார்டுகளிலும், 152 தொகுதி பஞ்சாயத்துகளில் 2080 வார்டுகளிலும், 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 331 பிரிவுகளிலும், 86 நகராட்சிகளில் 3078 வார்டுகளிலும் ஆறு மாநகராட்சிகளில் 414 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது.
மாநில தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மொத்த வாக்குப்பதிவு 76 சதவீதமாக இருந்தது. முன்னதாக 2015 வாக்கெடுப்பில் வாக்குப்பதிவு 77.76 சதவீதமாக இருந்தது. தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 244 வாக்கு எண்ணும் மையங்களில், தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில் பாலக்காடு நகராட்சியை , பாஜக இரண்டாவது முறையாக பெரும் பான்மையுடன் கைப்பற்றியுள்ளது இங்கு கடந்த 2015’லும் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரசின் கோட்டையாக இருந்து வரும் கொச்சி மாநகராட்சியில், காங்கிரசின் மேயர் வேட்பாளர் வேணுகோபால் பாஜக வேட்பாளரிடம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
பாலக்கட்டில் வெற்றி பெற 27 உறுப்பினர்களின் ஆதரவு தேவை படும் நிலையில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, பாஜகவினர் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாக்குகள் எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே அந்நகராட்சி அலுவலகத்தில் சத்ரபதி சிவாஜி புகைப்படம் அடங்கிய பேனர், பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமிட்ஷா புகைப்படங்கள் அடங்கிய பேனரை பறக்க விட்டனர்.
முழுக்க முழுக்க பாலக்காடு நகராட்சி காவி மயமாக மாறியுள்ளது, பாலக்காடு மட்டுமின்றி பத்தனம் திட்டா நகராட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது, மேலும் 24 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது, கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 100 வார்டுகளில் 34 இடத்தை கைப்பற்றி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த முறையை காட்டிலும் இரண்டு மடங்கு வெற்றியை பாஜக கேரளாவில் பதிவு செய்து இருப்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.