பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை
பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் பேட் கம்மின்ஸ் (904 புள்ளி)
முதலிடத்தில் தொடர்கிறார்.

ஸ்டூவர்ட்
பிராட் 1 இடம் முன்னேறி 2-வது
இடத்தையும், நீல் வாக்னர் 1 இடம்
பின்தங்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
7-வது இடத்தில் ஹோல்டர் 11-வது
இடத்திற்கு பின்தங்கினார். இதனால்
ஆன்டர்சன் 7-வது, பும்ரா 8-வது,
ஹேசில்வுட் 9-வது, ரவி அஸ்வின் 10-வது
இடத்திற்கும் முன்னேறினர்.

Breaking: ஜன., 4 முதல்
பள்ளிகள் திறப்பு – அரசு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரியில் ஜனவரி 4-ந் தேதி முதல்
பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும்
திறக்கப்படும் என அமைச்சர்
கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

அனைத்து வகுப்புகளும் காலை 10 மணி
முதல் மதியம் 1 மணி வரை செயல்படும்.
அரைநாள் மட்டும் செயல்படும்
பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள்
வரலாம். ஜன. 18 முதல் முழுமையாக
பள்ளிகளை செயல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றார்.

Breaking: தமிழகத்தை உலுக்கும்
மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

ராமநாதபுரம், தங்கச்சிமடம் அருகே
கந்துவட்டி கொடுமையால் அரசு
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்
பூமாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது
வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

2 நாட்களுக்கு
முன் விழுப்புரத்தில் 5 பேர் குடும்பத்துடன்
தற்கொலை செய்து கொண்ட நிலையில்,
மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டி
கொடுமை தலைதூக்குகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami