மருத்துவமனையில் வைரமுத்து
மருத்துவமனையில் வைரமுத்து
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ
மருத்துவமனையில் வைரமுத்து
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய
நோய் பிரச்சனைக்காக வைரமுத்து
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

இவர் உடல்நிலை
குறித்து மருத்துவமனை தெரிவிக்காத
நிலையில், உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை
கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு!
இறுதி செமஸ்டர் தவிர, பிற செமஸ்டரில்
அரியர் வைத்திருந்து, தேர்சி என
அறிவிக்கப்பட்ட மாணவர்கள்
தங்களுக்கான மதிப்பெண்களை
உயர்த்திக்கொள்ள மீண்டும்
தேர்வு எழுதலாம் என்று சென்னை
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டிசம்பர்
21ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம்
தேதி வரை அரியர் தேர்வு ஆன்லைனில்
நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
DakPay – இனி பணம்
அனுப்புவது ஈசி!
இந்திய தபால் துறை மற்றும் இந்தியா
போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு `டாக்
பே(DakPay)’ என்ற புதிய செயலியை
அறிமுகம் செய்துள்ளன.
இதன்மூலம்
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது,
மற்றவரின் வங்கிக் கணக்குக்கு பணம்
அனுப்புதல், கடைகளில் QR ஸ்கேன்
செய்து பணம் செலுத்துவது, கட்டணம்
செலுத்துவது உள்ளிட்ட சேவைகளை
பெறலாம். இந்திய தபால் வங்கியின்
டிஜிட்டல் சேவையையும் இது வழங்கும்.