11 பேர் உடல் கருகி பலி
11 பேர் உடல் கருகி பலி
ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில்
பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர்
உடல் கருகி உயிரிழந்தனர். மரத்தினால்
ஆன கட்டிடத்தில் இயங்கு வந்த இதில்
முதியவர்கள் 15 பேர் தங்கியிருந்தனர்.

திடீரென தீ பிடித்து வேகமாக பரவியதால்,
வெளியே வர முடியாமல் தவித்தனர்.
விபத்திலிருந்து தப்பிய 4 பேர் அளித்த
தகவலின் பேரி தீயணைப்பு வீரர்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது
குறித்த விசாரணை நடந்து வருகிறது.
JustIn: தமிழகத்தில் பள்ளிகள்
திறப்பு – பள்ளிக்கல்வித்துறை
அதிரடி
தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு
பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என
பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு
கொரோனா பரவக்கூடும் என்பதால்
ஆன்லைன் கல்வியை தொடர முடிவு
செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற
தேர்தலுக்கு பிறகு 10, 11, 12-ம்
வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
நடத்தவும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை
அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது
குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக
கூறப்படுகிறது.
பந்துவீச்சாளர்கள் தரவரிசை
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை
பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் பேட் கம்மின்ஸ் (904 புள்ளி)
முதலிடத்தில் தொடர்கிறார்.
ஸ்டூவர்ட்
பிராட் 1 இடம் முன்னேறி 2-வது
இடத்தையும், நீல் வாக்னர் 1 இடம்
பின்தங்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
7-வது இடத்தில் ஹோல்டர் 11-வது
இடத்திற்கு பின்தங்கினார். இதனால்
ஆன்டர்சன் 7-வது, பும்ரா 8-வது,
ஹேசில்வுட் 9-வது, ரவி அஸ்வின் 10-வது
இடத்திற்கும் முன்னேறினர்.