டிரெண்டிங்கில் மக்கள் சேவை கட்சி
டிரெண்டிங்கில்
MakkalSevaiKatchi
நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சி
குறித்த விவரங்களை டிச.31ம் தேதி
அறிவிப்பதாக தெரிவித்த நிலையில்,
‘மக்கள் சேவை கட்சி’ என்று அரசியல்
கட்சி பதிவு செய்துள்ளதாகவும்,
ஆட்டோரிஷா சின்னம் ஒதுக்கப்பட்டு
உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைதொடர்ந்து டிவிட்டரில்,
இந்திய அளவில் #MakkalSevaiKatchi
டிரெண்டிங்கில் முன்னிலையில்
உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ
தகவல் வெளியாகவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி
ஜியோ பரபரப்பு குற்றச்சாட்டு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு
எதிராக டெல்லியில் விவசாயிகள்
போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி
மற்றும் அதானி நிறுவனங்களின்
பொருட்களை புறக்கணிக்க வேண்டும்
என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ
மொபைல் எண்ணை புறக்கணித்து,
பிஎஸ்என்எல்-க்கு மாற வேண்டும்
என்று பலரும் பிரச்சாரம் செய்து
வருகின்றனர். இதன் பின்னணியில்
ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின்
ஊழியர்கள், முகவர்கள் மற்றும் சில்லறை
விற்பனையாளர்கள் இருப்பதாக ஜியோ
குற்றம் சாட்டியுள்ளது.
2022 மகளிர் உலகக்கோப்பை –
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2022-ம் ஆண்டு மகளிர் 50 ஓவர்
உலகக்கோப்பை தொடரை ஐசிசி
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, போட்டிகள் நியூசிலாந்தில்
2022 மார்ச் 4 முதல் ஏப்ரல் 3-ந் தேதி
வரை நடைபெறவுள்ளது. 8 அணிகள்
பங்கேற்கும் இந்த தொடரில், மொத்தம்
31 போட்டிகள் நடைபெறும்.
முதல்
போட்டி டாரங்காவின் பே ஓவல்
மைதானத்திலும், இறுதிப்போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.