2022 மகளிர் உலகக்கோப்பை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2022 மகளிர் உலகக்கோப்பை –
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2022-ம் ஆண்டு மகளிர் 50 ஓவர்
உலகக்கோப்பை தொடரை ஐசிசி
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, போட்டிகள் நியூசிலாந்தில்
2022 மார்ச் 4 முதல் ஏப்ரல் 3-ந் தேதி
வரை நடைபெறவுள்ளது. 8 அணிகள்
பங்கேற்கும் இந்த தொடரில், மொத்தம்
31 போட்டிகள் நடைபெறும்.

முதல்
போட்டி டாரங்காவின் பே ஓவல்
மைதானத்திலும், இறுதிப்போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மாலை நேர தங்கம் விலை -உயர்வு
சவரனுக்கு ரூ.336 உயர்வு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி
22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.
37.224க்கும், கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.
4,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை
கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.67.90க்கும்,
ஒரு கிலோ வெள்ளி ரூ.67900க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
இதயத்திற்கு எந்த டீ பெஸ்ட்?
பால் கலக்காத பிளாக் டீயை விட,
பால் கலந்த டீ தான் நாம் அதிகம்
அருந்துவது. பிளாக் டீ மற்றும் க்ரீன் டீ
வகைகளில் உள்ள ஃப்ளேவனாய்டு,
ஆன்டிஆக்சிடன்ட் உட்பொருட்கள்
செல்களில் உள்ள ஃப்ரீரேடிகல்ஸ்
நுண்மங்களை நீக்குவதால் புற்றுநோய்,
கொலஸ்டிரால், இதய நோய்கள் வரும்
ஆபத்தை குறைக்கின்றன.
ஆனால்,
பால் கலந்த டீயில் புரதமும் கொழுப்பும்
அதிகரிப்பதால் தேயிலையின் மருத்துவ
குணங்கள் குறைய வாய்ப்புள்ளது.
அதேநேரம், பால் டீயில் உள்ள புரதம்
மற்றும் கால்சியம் உடலுக்கு ஊட்டம்
அளிக்கிறது. மொத்தத்தில் அளவாக
அருந்தினால் இரண்டுமெ பெஸ்ட் தான்.