180 கிமீ தூர ஓட்டப் பந்தயம்
180 கிமீ தூர ஓட்டப் பந்தயம்
1971 டிசம்பர் 3 முதல் 16 தேதிவரை
நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான்
போரில் இந்தியா வெற்றி பெற்றதை
நினைவுகூறும் வகையில், எல்லை
பாதுகாப்பு படை வீரர்கள் ஓட்டப்பந்தயம்
நடத்தினர்.

இதில், போரில் பங்கேற்ற
வீரர்களை கவுரவிக்கும் வகையில்
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 180
கிலோமீட்டர் ஓடினர். போட்டியில்
ராஜஸ்தானை சேர்ந்த அனுப்கர்
வெற்றியடைந்தார்.
குறைந்த பார்வையாளர்களுடன்
சர்வதேச திரைப்பட விழா
51வது சர்வதேச திரைப்பட திருவிழா
கோவாவில் நடைபெறவுள்ளது.
இதன் தொடக்க மற்றும் நிறைவு விழா
குறைந்தளவு பார்வையாளர்களுடன்
நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி
வரை நடைபெறவுள்ள இந்த விழாவில்,
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
என்ற அடிப்படையில் முன்பதிவு
நடைபெறும் என்று கொரோனா காரணமாக
குறைவான பங்கேற்பாளர்களுக்கே
அனுமதியளிக்கப்படும் என்று
தெரிவித்துள்ளார்.
டிரெண்டிங்கில்
MakkalSevaiKatchi
நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சி
குறித்த விவரங்களை டிச.31ம் தேதி
அறிவிப்பதாக தெரிவித்த நிலையில்,
‘மக்கள் சேவை கட்சி’ என்று அரசியல்
கட்சி பதிவு செய்துள்ளதாகவும்,
ஆட்டோரிஷா சின்னம் ஒதுக்கப்பட்டு
உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து டிவிட்டரில்,
இந்திய அளவில் #MakkalSevaiKatchi
டிரெண்டிங்கில் முன்னிலையில்
உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ
தகவல் வெளியாகவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.