BREAKING: பெரும் அதிர்ச்சிதமிழகத்தில் கல்லூரிகள் மூடல்?
BREAKING: பெரும் அதிர்ச்சிதமிழகத்தில் கல்லூரிகள் மூடல்?
ஐ.ஐ.டியை தொடர்ந்து அண்ணா
பல்கலைக்கழக மாணவர்களுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அனைத்து
மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு
வாரமாக கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,
பெற்றோர்கள், பேராசிரியர்கள்
கலக்கமடைந்துள்ளனர். இதனால்,
கல்லூரிகள் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரை தேவையின்றி
ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு
எதிரான 3 அவதூறு வழக்குகளை
ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
மேலும், முதல்வர்
பழனிசாமியை மு.க.ஸ்டாலின்
தேவையின்றி கடுமையாக விமர்சிக்கக்
கூடாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க
கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
தங்கம், வெள்ளி விலை குறைவு
சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.
37,016-க்கும், கிராமுக்கு ரூ.30
குறைந்து ரூ.4,627-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,056-க்கும், கிராம் ரூ.
5,007-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி
விலை கிராமுக்கு 0.30 காசு குறைந்து
கிராம் ரூ.67.10-க்கும், கிலோ வெள்ளி ரூ.
67,100-க்கும் விற்கப்படுகிறது.