நடராஜனுக்கு டெஸ்டில் வாய்ப்பு

நடராஜனுக்கு டெஸ்டில் வாய்ப்பு

ஆஸி.,க்கு எதிரான டி20 தொடர்
முடிந்தவுடன் பாண்ட்யா, சாஹல், தீபக்
சாஹர் உள்ளிட்ட வீரர்கள் இந்தியா
திரும்பி விட்டனர். இந்நிலையில்,
நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன்
சுந்தர் ஆகிய மூவரையும் இந்திய
டெஸ்ட் அணியுடன் தங்கி இருக்குமாறு
பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

திடீரென யாராவது ஒருவருக்கு காயம்
ஏற்பட்டால் அந்த வீரருக்கு மாற்றாக
இவர்களில் ஒருவரை களமிறக்க
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

இறந்த பிக்பாஸ் பிரபலத்தின்
தந்தை உடல் 1 மாதத்துக்கு பின்
அடக்கம் – கண்ணீர்

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின்
தந்தை மரியநேசன் கடந்த மாதம்
கனடாவில் காலமானார். இந்நிலையில்,
பல சிக்கல்களுக்கு பிறகு 1 மாதத்துக்கு
பின் மரியநேசனின் உடல் இலங்கைக்கு
கொண்டு வரப்பட்டு, உடல் இறுதி
தகனம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது
அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது. இது லாஸ்லியா
மற்றும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குள்ளான தனுஷின்
கர்ணன் படம்

கர்ணன் திரைப்படத் தலைப்பை
மீண்டும் உபயோகப்படுத்த கூடாது என
தனுஷூக்கு சிவாஜி சமூகநலப்பேர்வை
கடிதம் எழுதியுள்ளது.

தனுஷ் நடிப்பது
ஒரு சமூகத்தை சார்ந்த திரைப்படம்
என்றும், அதற்கு கர்ணன் என
பெயரிடுவது மகாபாரதத்தை நேசிக்கும்
கோடிக்கணக்கானோரின் மனதை
புண்படுத்தக்கூடியதாக அமையும்
என்பதால் பெயர் மாற்றம் வேண்டும்
என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami