யாருக்காக பாராளுமன்றம்?மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி?
யாருக்காக பாராளுமன்றம்?மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி?
“சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில்
ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து
போனார்கள்.

மக்களைக் காக்கத்தான்
இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து
பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,
ஆயிரம் கோடியில் பாராளுமன்றம்
கட்டுவது யாரைக்காக்க? பதில்
சொல்லுங்கள் என் மாண்புமிகு
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று மநீம
தலைவர் கமல்ஹாசன் வினவியுள்ளார்.
எக்ஸிம் வங்கியில் வேலை
எக்ஸிம் (EXIM) வங்கியில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
பணி: Management
Trainee. காலிப்பணியிடங்கள்: 60.
பணியிடம்: நாடு முழுவதும். வயது:
30-க்குள். சம்பளம்: ரூ.40,000.
கல்வித்தகுதி: B.E/MBA/PGDCA/Master’s
degree. விண்ணப்ப கட்டணம் ரூ.600.
(SC/ ST/ PWD ரூ.100). விண்ணப்பிக்க
கடைசி தேதி டிச., 31. மேலும்,
விவரங்களுக்கு www.eximbankindia.in/
careers என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
படப்பிடிப்புக்கு கிளம்பிய
அண்ணாத்த
டிசம்பர் 15ஆம் தேதி முதல் அண்ணாத்த
திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
தொடங்கவுள்ள நிலையில், நடிகர்
ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு
சென்றார். அப்போது அவர் பேசுகையில்,
20,25 நாள் படப்பிடிப்பு திட்டம் உள்ளது,
படப்பிடிப்பு முடிந்து மீண்டும் சென்னை
திரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் ஐதராபாத்தில் இருந்து
கொண்டே டுவிட்டரில் கட்சி குறித்த
அறிவிப்பை வெளியிடுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.