தமிழகத்தில் வாக்காளர் திருத்தம் -முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும்
- மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வாக்காளர்
பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள
இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு
முகாம் நடக்கிறது. வாக்காளர் சிறப்பு
முகாமில் வாக்காளர்கள் தங்கள் பெயர்,
முகவரி உள்ளிட்டவற்றில் திருத்தம்
மேற்கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும்
உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில்
பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன்
மனு அளிக்கலாம். மேலும், வாக்காளர்
பட்டியலில் திருத்தம் செய்து ஜன.,
20-ல் இறுதி வாக்காளர் பட்டியல்
வெளியிடப்படும்.
உழைத்துக் களைத்த உடம்பா? இதோ இயற்க்கை மருந்து
நாள்தோறும் ஓடியாடி உழைப்பதால் அசதி
நீங்கவும் உடல் வலி, கை, கால் வீக்கம்
போன்றவையை கட்டுக்குள் வைக்கவும்
இதை கட்டாயம் செய்யுங்கள். வாரம்
ஒருமுறை உப்பை வறுத்து உடலில்
ஒத்தடம் கொடுக்கலாம்.
தினமும் இரவில்
பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
வாரம் ஒருமுறை இரவில் நொச்சி
இலையை சுடுநீரில் கொதிக்க வைத்து
குளித்தால் நான்கைந்து நாட்களுக்கு உடல் புத்துணர்வோடு இருக்கும்.
16 லட்சத்தை தாண்டிய பலி…
உலகம் முழுவதும் பல்வேறு
நாடுகளில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
7,14,12,745 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 16,00,316 ஆகவும்,
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்
எண்ணிக்கை 4,95,95,366 ஆகவும்
உயர்ந்துள்ளது.
மேலும், 1,06,569 பேர்
மருத்துவமனைகளில் கவலைக்கிடமான
நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.