முதல்வரை அவதூறாக பேசியதால் ஆ. ராசா மீது வழக்கு பதிவு !

முதல்வரை அவதூறாக பேசியதால் ஆ. ராசா மீது வழக்கு பதிவு !

முதல்வர் பழனிசாமியை அவதூறாக
விமர்சித்த புகாரில் திமுக எம்பி
ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு
பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதிமுக
வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்
திருமாறன் மற்றும் செல்வகுமார்
ஆகியோர் அளித்த புகாரின்பேரில்,
153, 505(1)(b) ஆகிய 2 பிரிவுகள்:
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி
ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில்
ஈடுபட தூண்டுதல் ஆகியவற்றின் கீழ்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
வழங்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொள்ளவுள்ளனர்.

உலகம் முழுவதும் எரிகற்கள் மழை -மிஸ் பண்ணாதீங்க… oh Wow!

டிச.,13, 14-ல் நிகழும் அதிசயம்..

வால் நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும்
தூசி மண்டலத்தின் வழியாக செல்வதால்,
டிச.,13, 14-ந் தேதிகளில் எரிகற்கள்
மழையாய் பொழியும் என வானிலை
நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக 1 மணிநேரத்தில் 150
எரிநட்சத்திரங்கள் விழும் என்றும், உலகம்
முழுவதும் இந்த காட்சி தெரியும் எனவும்
தெரிவித்துள்ளனர். ஆனால், ஒளி மாசு
நிறைந்த நகர்ப்புறங்களில் இந்த காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.

JustIn: மேலும் ஒரு பிரபல
இளம் நடிகை மர்ம மரணம்அதிர்ச்சி

மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் நடிகை
ஆர்யா பானர்ஜி (33) வீட்டில் பிணமாக
கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர்
வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர்,
லவ் செக்ஸ் அன்ட் தோக்கா ஆகிய
படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யாவின்
வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்
கதவை தட்டியபோது திறக்காததால்,
போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கதவை திறந்தபோது, ஆர்யா மூக்கில்
ரத்தம் வழிய வாந்தி எடுத்த நிலையில்
இறந்து கிடந்துள்ளார். தொடர்ந்து
மரணம், தற்கொலைகள் என 2020 நடிகர்,
நடிகைகளுக்கு மோசமான ஆண்டாக
அமைந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami