கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேட்டு இருக்கிறீர்களா உண்மையில் நடந்து விட்டது!!!

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேட்டு இருக்கிறீர்களா உண்மையில் நடந்து விட்டது!!!

தமிழகத்தில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என சில எடுத்துக்காட்டுகள் பேசுவது உண்டு அது தற்போது உண்மையாக நடந்துள்ளது, அதிமுக திமுக இடையே 2ஜி ஊழல் வழக்கை முன்வைத்து இரண்டு தரப்பும் இடையே காரசார மோதல்கள் எழுந்து வருகின்றன.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மக்களவை எம்.பி-யுமான ராசா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேச அதன் பிறகு அதிமுகவினரும் குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என பதிலுக்கு விமர்சனம் வைத்தனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என ஆ ராசா தெரிவிக்க இல்லை இல்லை உலக அளவில் மிக பெரிய ஊழல் 2ஜி ஊழல்தான் அதை செய்தது திமுகதான் என அதிமுக இன்றும் குற்றம் சாட்டி வருகிறது இது ஒரு புறம் இருக்க தற்போது மற்றொரு சம்பவம் திமுகவினருக்கு மேலும் ஒரு தலைவலியாக அமைந்துள்ளது.

மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட ஒப்பந்தம் ஒன்றை தனியார் நிறுவனத்திடம் செய்தது, இதன் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது, பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார், இந்த சம்பவம் குறித்து திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கிறது இந்த நேரத்தில் புதிய கட்டடம் தேவையா எனவும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இது இரண்டு தரப்பினர் இடையே வார்த்தை போரை உண்டாக்கிய நிலையில் பதிலுக்கு பாஜகவினர் கிளப்பிய சம்பவம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது ,2008-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் ஒன்று கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது, 12,000 சதுரமீட்டர் அளவில் கட்டிய தலைமை செயலகத்துக்கு திமுக ஆட்சியில் ஆன செலவு ரூ 465 கோடி!
பாஜக 2020 இல் 65,000 சதுரமீட்டர் அளவில் கட்டும் பாராளுமன்றத்துக்கு ஆகும் செலவு ரூ 970 கோடி எனவும்.

12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் கட்டிய கட்டத்தை வெறும் 150-180 கோடிகளில் கட்டி முடிக்கலாம் எனவும் இது மிக பெரிய ஊழல் எனவும் அவர்கள் பதிலுக்கு கருத்து தெரிவிக்க மிக பெரிய சர்ச்சை சம்பவம் மக்கள் கவனத்திற்கு வந்துள்ளது, அதாவது திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டத்தின் 50% தொகை லஞ்சமாக சென்று இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்கள் எழ தொடங்கியுள்ளன.

ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த அன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை ஊழல் கட்சி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை கொடுக்கிறார் ஆனால் திமுக ஆட்சியில் விடப்பட்ட பல டெண்டர்கள் 70% அளவிற்கு மீண்டும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது, வழக்கமாக 10 முதல் 15% தொகை அதிகரிக்கும் என வைத்து கொள்ளலாம் ஆனால் அது எப்படி 70 % வரை கொடுக்கலாம் அதுவே மிக பெரிய ஊழல் பட்டியல் அனைத்தும் இருக்கிறது எங்கு எப்போது செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் என குறிப்பிட்டார்.

இப்போது திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் அவற்றில் ஊழல் நடைபெற்றதிற்கு தேவையான ஆதாரங்கள் என அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது, திமுகவினர் புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்து பாஜகவை விமர்சனம் செய்ய சென்று இப்போது திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகார்கள்.

திமுகவினர் கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami