TOP 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோட்டு பெண் யார் அவர்?
TOP 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோட்டு பெண் யார் அவர்?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இது நம்பும்படியாக உள்ளதா? என கேட்கலாம். ஆம். இதை நம்பித்தான் ஆக வேண்டும்.
பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் சாதனை பெண்ணின் சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 870 கோடி ஆகும். அந்த சாதனை பெண்ணின் பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் வெளியிடப்பட்டு உள்ளது. டாக்டர் வித்யா வினோத், துபாயை தலைமை இடமாக கொண்ட ஸ்டடி வேர்ல்டு எஜுகேசன் ஹோல்டின் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.

டாக்டர் வித்யா வினோத் இந்தியாவின் 8-வது இடம் பிடித்த பெண் சுய தொழில்முனைவோர் ஆவார். தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் உள்ள 100 பணக்கார பெண்களில் 36 பேர் சுயமாக வளர்ந்த பணக்காரர்கள் என்றால் அது மிகையாகாது.