இளம் வயதினருக்கு முன்னுரிமை – மகிழ்ச்சி செய்தி
இளம் வயதினருக்கு
முன்னுரிமை – மகிழ்ச்சி செய்தி
அம்மா இருசக்கர வாகன திட்டத்தில்
பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
என சென்னை மாநகராட்சி
அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
அவர்கள் வாங்கும் 2 சக்கர வாகனத்தின்
விலையில் 50% அல்லது 25 ஆயிரம்
தொகை மானியமாக வழங்கப்படும்.

18 முதல் 45 வயது வரை உள்ள
பெண்கள் தேவையான சான்றுகளுடன்
சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில்
விண்ணப்பிக்கலாம்..
இனி சுலபம் – உடனே இதை
செய்யுங்கள்
வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் சில
புதிய அம்சங்களை அறிமுகம் செய்து
வருகிறது. அந்த வகையில், அப்டேட்
செய்யப்பட்ட பின் வாட்ஸ் அப் பிசினெஸ்
பயன்பாட்டில் ஷாப்பிங் செய்வதற்கான
கார்ட் என்ற புதிய அம்சத்தை அறிமுகம்
செய்துள்ளது.
மற்ற செயலிகளை
போலவே விருப்பமானவற்றை வாட்ஸ்
அப் கார்டில் சேர்த்துக்கொள்ளும்
வசதி விற்பனையாளர்களுக்கும்,
பயணர்களுக்கும் உதவியாக இருக்கும்
என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் புக் பண்றேங்களா!
- அதிரடி அறிவிப்பு மிஸ்
பண்ணாதீங்க
ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு
செய்பவர்கள் ரூ.500 கேஷ்பேக் பெறலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு
செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.500
கேஷ்பேக் பெறலாம்.
பேடிஎம் மூலம்
முதல்முறையாக சிலிண்டர் முன்பதிவு
செய்யும் வாடிக்கையாளர்களுக்கு
மட்டும் இந்த சலுகை பொருந்தும்.
அதில் கட்டணம் செலுத்துவதற்கு முன்பு
FIRSTLPG என்ற குறியீட்டை பதிவிட்டு,
பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே
கேஷ்பேக் பெற முடியும்.