தங்கம், வெள்ளி விலை சரிவு!
தங்கம், வெள்ளி விலை சரிவு!
சென்னையில் இன்று காலை நேர
நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312
குறைந்து ரூ.37,160க்கும், கிராமுக்கு
ரூ.39 சரிந்து ரூ.4,645க்கும், 24 கேரட்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
40,200க்கும், கிராமுக்கு ரூ.5,025க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம்
வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து
ரூ.67.30க்கும், கிலோ ரூ.67,300க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
BREAKING: சித்ரா தற்கொலை…
அடுத்த திருப்பம் இது!
பிரபல சின்னத்திரை சித்ரா திடீரென்று
தற்கொலை செய்து கொண்டது
அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சித்ரா
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்
தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்,
படப்படிப்பில் இருந்த சக நடிகர்களிடமும்
விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.
மேலும், 2ம் நாளாக சித்ராவின் கணவர்
மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம்
விசாரணை நடைபெற்று வருகிறது.
சபரிமலைக்கு வர வேண்டாம்!அதிர்ச்சி தகவல்
ஆன்லைனில் முன்பதிவு செய்யாத
நபர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்
என்று தேவசம் போர்டு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
மண்டல பூஜைக்காக
சபரிமலை நடை திறக்கப்பட்டாலும்,
கொரோனா பரவல் காரணமாக
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு
மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும்,
முன்பதிவு செய்யாமல் ஏராளமான
பக்கதர்கள் வந்தாலும் அனுமதி
அளிப்பதில்லை என்றும் விளக்கம்
அளித்துள்ளது.
.