பிரபல பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்திரா தற்கொலை காரணம் என்ன?
பிரபல பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்திரா தற்கொலை காரணம் என்ன?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்திரா இவர் இன்று அதிகாலை ஹோட்டல் அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருக்கு வ ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. இவர் டிவி சீரியலில் நடிப்பதற்காக சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலில் தூக்குப்போட்ட நிலையில் அவர் சரடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

28 வயதான சித்ரா, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும்.
அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா. இதன்பிறகு இன்று காலைக்குள் தற்கொலை நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த காவல்துறை ஹேமந்த்தை கைது செய்ய விரைந்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்திரா தற்கொலை சின்னத்திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.