வட்டி தள்ளுபடி – ரூ.6 லட்சம் கோடி இழப்பு
வட்டி தள்ளுபடி – ரூ.6 லட்சம்
கோடி இழப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து
வகை கடனுக்கும் வட்டியை தள்ளுபடி
செய்வது வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி
இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது
வங்கியின் அடிப்படை செயல்பாட்டை
சீர்குலைக்கும் என்றும், வட்டித் தள்ளுபடி
யோசிக்ககூட முடியாது என்பதால் மாதத்
தவணைகளை தாமதமாக செலுத்த
அனுமதி அளித்துள்ளதாக விளக்கம்
அளித்துள்ளது.
8 வழிச்சாலை அவசியம்…
8 வழிச்சாலை குறித்து விளக்கமளித்த
முதல்வர் பழனிசாமி, விபத்து, கால
விரயம், எரிபொருள் சேமிப்பு,
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
சாலை விரிவாக்கம் அவசியம். 8
வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். நிலம்
கையகப்படுத்தியது மட்டுமே மாநில
அரசு, 8 வழிச்சாலை என்பது நீண்ட கால
திட்டம். இப்போது தொடங்கினால் கூட
முடிய 6 ஆண்டுகளாகும்.
வெளிநாடுகளில்
குறைந்தபட்சமே 8 வழிச்சாலை தான்
உள்ளது. நாடு, தொழில் வளர்ச்சிக்கு
சாலை அவசியம் என தெரிவித்துள்ளார்.
JUSTIN: இனி ரயில்களில்… மிக
முக்கிய அதிரடி அறிவிப்பு!
கொரோனா தொற்றுநோய் பரவலை
கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே
கேட்டரிங் சேவை தொடர்பான பல
விதிமுறைகளை மாற்றியுள்ளது. இனி
சில ரயில்களில் மட்டுமே பேண்டரி கார்
இருக்கும் என்று தெரிவித்துள்ள ரயில்வே,
பேண்ட்ரிகளிலும் புதிதாக சமைக்கப்பட்ட
உணவு கிடைக்காது, Packed உணவுகள்
மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும்
உணவுகள் மட்டுமே இருக்கும் என்று
தெரிவித்துள்ளது.
நீங்கள் பதிவு செய்யும்
ரயிலில் பேண்ட்ரி கார் வசதி இருக்கிறதா
என்பதை தெரிந்துகொண்டு பயணம்
செய்யுங்கள்.