FlashNews: கொரோனா தடுப்பூசி ஃப்ரீ… உடனே பதிவு பண்ணுங்க!
FlashNews: கொரோனா தடுப்பூசி
ஃப்ரீ… உடனே பதிவு பண்ணுங்க!
இந்திய மக்களுக்கு விரைவில்
தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய
கோவின்(Co-WIN) எனும் செயலி
உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா
தடுப்பூசிக்கு சர்க்கரை, இதய நோய்
உள்ளவர்கள், தாங்களே இச்செயலியில்
பதிவு செய்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர், பாரத்
பயோடெக், சீரம் ஆகிய மருந்து
நிறுவனங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல்
கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில்,
நீண்ட நாள் நோய் பாதிப்பு உள்ளவர்கள்
இச்செயலியில் பதிவு செய்வதன் மூலம்
முன்னுரிமை அளிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலை சரிவு!
சென்னையில் இன்று காலை நேர
நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192
குறைந்து ரூ.37,472க்கும், கிராமுக்கு
ரூ.24 சரிந்து ரூ.4,684க்கும், 24 கேரட்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
40,512க்கும், கிராமுக்கு ரூ.5,064க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம்
வெள்ளி விலை 80 காசுகள் குறைந்து ரூ.
68க்கும், கிலோ ரூ.68,000க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக
களமிறங்கும் மாணவர்கள்
புதிதாக அமல்படுத்தப்பட்ட வேளாண்
சட்டங்களை ரத்து செய்யக்கோரி
டெல்லியில் விவசாயிகள் போராடி
வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு
துறையினர், தொழிற்சங்கத்தினர் ஆதரவு
அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,
தமிழகத்தில் தஞ்சை சரபோஜி அரசு
கல்லூரி வாயில் முன் இந்திய மாணவர்
சங்கத்தினர் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.