மிதமான மழைக்கு வாய்ப்பு
மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவக்காற்றால் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு
வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்
தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர்
பகுதியில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் என்றும், வடகிழக்கு
பருவமழை இயல்பை விட 9% அதிகம்
பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் இயல்பை விட
47% அதிகமாக 102.9 செமீ மழை
பதிவாகியுள்ளது.
இதய நோயிலிருந்து காக்க….
மாமிச உணவுகளை குறைத்து தாவர
உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு
இருதய நோய்கள் ஏற்படுவதற்கான
அபாயம் குறைவாக உள்ளதாக
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடலில் ஜீரண சக்திக்கு உதவும் பாக்டீரியாக்களின் செயல் திறனை தாவர உணவுகள்மேம்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்வது குறையும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FlashNews: கொரோனா தடுப்பூசி
ஃப்ரீ… உடனே பதிவு பண்ணுங்க!
இந்திய மக்களுக்கு விரைவில்
தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய
கோவின்(Co-WIN) எனும் செயலி
உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா
தடுப்பூசிக்கு சர்க்கரை, இதய நோய்
உள்ளவர்கள், தாங்களே இச்செயலியில்
பதிவு செய்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசர், பாரத்
பயோடெக், சீரம் ஆகிய மருந்து
நிறுவனங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல்
கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில்,
நீண்ட நாள் நோய் பாதிப்பு உள்ளவர்கள்
இச்செயலியில் பதிவு செய்வதன் மூலம்
முன்னுரிமை அளிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.