8வழிச்சாலை அவசியம்…
8 வழிச்சாலை அவசியம்…
8 வழிச்சாலை குறித்து விளக்கமளித்த
முதல்வர் பழனிசாமி, விபத்து, கால
விரயம், எரிபொருள் சேமிப்பு,
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
சாலை விரிவாக்கம் அவசியம். 8
வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். நிலம்
கையகப்படுத்தியது மட்டுமே மாநில
அரசு, 8 வழிச்சாலை என்பது நீண்ட கால
திட்டம். இப்போது தொடங்கினால் கூட
முடிய 6 ஆண்டுகளாகும்.

வெளிநாடுகளில்
குறைந்தபட்சமே 8 வழிச்சாலை தான்
உள்ளது. நாடு, தொழில் வளர்ச்சிக்கு
சாலை அவசியம் என தெரிவித்துள்ளார்.
JUSTIN: இனி ரயில்களில்… மிக
முக்கிய அதிரடி அறிவிப்பு!
கொரோனா தொற்றுநோய் பரவலை
கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே
கேட்டரிங் சேவை தொடர்பான பல
விதிமுறைகளை மாற்றியுள்ளது. இனி
சில ரயில்களில் மட்டுமே பேண்டரி கார்
இருக்கும் என்று தெரிவித்துள்ள ரயில்வே,
பேண்ட்ரிகளிலும் புதிதாக சமைக்கப்பட்ட
உணவு கிடைக்காது, Packed உணவுகள்
மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும்
உணவுகள் மட்டுமே இருக்கும் என்று
தெரிவித்துள்ளது.
நீங்கள் பதிவு செய்யும்
ரயிலில் பேண்ட்ரி கார் வசதி இருக்கிறதா
என்பதை தெரிந்துகொண்டு பயணம்
செய்யுங்கள்.
ஆப்பிள் நிறுவனத்தை சாடிய
பிரபலம்
தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா
பிரபல நிறுவனத்திடம் ஜாக்கிரதையாக
இருக்குமாறு எச்சரித்துள்ளார். தமிழில்
ரட்சகன், பயணம் உள்ளிட்ட படங்களில்
நடித்த இவர், தன் டிவிட்டர் பக்கத்தில்,
ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை
வாங்கும்போது கவனமாக இருக்க
வேண்டும் என்றும், அவர்களின்
விதிமுறைகள் ஒரு சார்புடையது மற்றும்
மோசமானது என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு
பிரபல நிறுவனத்தின் மீது நடிகர் ஒருவர்
குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.