கொழுப்புச்சத்து நல்லது
கொழுப்புச்சத்து நல்லது
கொழுப்புச்சத்து ஒரு நோய் என்பது
போலவே பலராலும் கருதப்படுகிறது.
ஆனால் இது இயற்கையாக நம்
உடலில் உருவாகின்ற ஒன்று எனவும்,
உடலுக்கு கொழுப்புச்சத்தும் தேவை
என்பதை பலர் மறந்துவிடுகின்றனர்.

நல்ல கொழுப்புச்சத்து, மூளையின்
வளர்ச்சிக்கும், செல்களின்
செயல்பாட்டுக்கும் இன்றியமையாத
தேவை என்றும், அறவே தவிர்ப்பது தவறு
என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டி தள்ளுபடி – ரூ.6 லட்சம்
கோடி இழப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து
வகை கடனுக்கும் வட்டியை தள்ளுபடி
செய்வது வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி
இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது
வங்கியின் அடிப்படை செயல்பாட்டை
சீர்குலைக்கும் என்றும், வட்டித் தள்ளுபடி
யோசிக்ககூட முடியாது என்பதால் மாதத்
தவணைகளை தாமதமாக செலுத்த
அனுமதி அளித்துள்ளதாக விளக்கம்
அளித்துள்ளது.
8 வழிச்சாலை அவசியம்…
8 வழிச்சாலை குறித்து விளக்கமளித்த
முதல்வர் பழனிசாமி, விபத்து, கால
விரயம், எரிபொருள் சேமிப்பு,
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
சாலை விரிவாக்கம் அவசியம். 8
வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். நிலம்
கையகப்படுத்தியது மட்டுமே மாநில
அரசு, 8 வழிச்சாலை என்பது நீண்ட கால
திட்டம். இப்போது தொடங்கினால் கூட
முடிய 6 ஆண்டுகளாகும்.
வெளிநாடுகளில்
குறைந்தபட்சமே 8 வழிச்சாலை தான்
உள்ளது. நாடு, தொழில் வளர்ச்சிக்கு
சாலை அவசியம் என தெரிவித்துள்ளார்.