BREAKING மலேசிய பிரதமர் வழியில் கனடா பிரதமரின் ஆட்சியும் அம்போ!!

BREAKING மலேசிய பிரதமர் வழியில் கனடா பிரதமரின் ஆட்சியும் அம்போ!!

இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடும் வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை சந்தித்து வருவதுடன் தங்களது ஆட்சியையும் இழப்பது தொடர்கதையாக மாறிவருகிறது, இந்தியாவில் CAA சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்போதைய மலேசிய பிரதமராக இருந்த மஹாதீர் முகமது கடுமையாக எதிர்த்தார்.

இந்தியா இது தங்கள் நாட்டு உள்விவகாரம் என்று கூறிய நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார் மகாதீர் முகமது, இதனையடுத்து இந்தியா மலேசியா நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதியை முழுமையாக நிறுத்தியது அதனை தொடர்ந்து நாட்டின் வருவாய் பெருமளவு இறங்குமுகத்தை சந்தித்தது.

இறுதியாக இந்தியாவை பகைத்து கொள்ளும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் பெரிய நாடு அல்ல எனவே எங்களிடம் இருந்து பாமாயில் மீண்டும் இறக்குமதி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார், ஆனால் இந்தியா அதை கண்டுகொள்ளவில்லை சிறிது நாட்களில் அந்நாட்டின் அரசியல் மாற்றம் உண்டானது, மகாதீர் முகம்திற்கு ஆதரவு கொடுத்துவந்த கூட்டணி கட்சி ஆதரவை விலக்கி கொள்வதாக எச்சரித்தது.

இதையடுத்து சொந்த கட்சியினரே மகாதீர் முகமதிற்கு எதிராக திரும்ப அவர் தனது பிரதமர் பதவியை இழந்தார், இந்தியாவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தவர் மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார். இது நடந்த கதை அதே போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனடா பிரதமர் இந்தியாவில் நடைபெறும் சீக்கிய விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் இது இருநாடுகளும் இடையேயான உறவை சீர்குலைக்கும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதைப்பற்றி கனடா பிரதமர் கண்டு கொள்ளவில்லை,கனடாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக சீக்கியர்கள் பலர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். கனடா பிரதமர் தேர்தலின்போது சீக்கியர்களின் வாக்கு மிகவும் முக்கியமானது பல நேரங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளது.

இதனை கவர்வதற்கு கனடாவில் உள்ள கட்சிகள் அவர்களுக்கு சலுகைகள் பலவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிப்பது வழக்கம். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய சீக்கிய பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் அமைப்பின் தலைவன் கலந்துகொண்டு ஜஸ்டின் ட்ரூடோ உடன் நெருக்கமாக இருந்த நிலையில் பிரதமர் மோடி கனடா பிரதமருடனான பல நிகழ்ச்சிகளை தவிர்த்தார்.

இப்படி பல நேரங்களில் இந்தியா கனடா நாட்டு தலைவர்கள் இடையே மறைமுக மோதல் உண்டானது, நிலைமை இப்படி இருக்க தற்போது கனடா பிரதமரின் ஆட்சிக்கு ஆபத்து வந்துள்ளது, கனடா பிரதமர் தேர்தலில் ஜஸ்டின் ட்ருடோ கட்சி பெரும்பான்மை பெறவில்லை மாறாக கூட்டணி ஆட்சியே அங்கு நிலவி வருகிறது, இப்போது ஜஸ்டின் ட்ருடோ இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் கருத்து தெரிவித்தநிலையில், இந்திய அரசாங்கமும் கனடா உள்விவகாரங்களில் தலையிட தொடங்கியுள்ளது.

கனடா நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அடியில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர், ரயில் மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்ட சூழலில் கனடா மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகள் உண்டானது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின் ட்ருடோ, எனது அரசு போராட்டங்களை பார்த்து அஞ்சாது எனவும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன் எனவும் தெரிவித்தார், அதாவது இந்திய விவசாயிகள் செய்யும் போராட்டத்தை ஆதரித்த ட்ருடோ, தனது நாட்டில் நடக்கும் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவதாக தெரிவித்தார்.

இதை பயன்படுத்திய இந்திய உளவு அமைப்புகள், அந்நாட்டில் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நில உரிமையாளர்களை அணி திரட்டி மீண்டும் கனடா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைக்க தொடங்கியுள்ளது, இதில் ஆச்சர்யமான சம்பவம் என்னவென்றால் இப்போது ஜஸ்டின் ட்ருடோவிற்கு ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்திய விவகாரத்தில் நமது நாடு தலையிடுவது தவறு எனவும், அவர்கள் நமது விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க நினைத்தால் என்ன நடக்கும் என எனவும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

நிலைமை இப்படி இருக்க மலேசிய அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு பதவியை இழந்தது போன்று இப்போது பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி தயவில் ஆட்சி நடத்திவரும் ஜஸ்டின் ட்ருடோ அவரது பதவியை இழக்க போவதாகவும் அதற்கான முன்னோட்டம் தான் கனடாவில் தொடங்க இருக்கும் அந்நாட்டு விவசாயிகள் போராட்டம் என்கின்றனர் இரு நாடு நடவடிக்கையும் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami