12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை
12 மாவட்டங்களில் இடி,
மின்னலுடன் கூடிய கனமழை
தமிழகத்தின் 12 மாவட்டங்களில்
இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு
வாய்ப்புள்ளது என்று வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு,
விழுப்புரம், கடலூர், பெரம்பலூர்,
அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர்,
நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில்
கனமழை பெய்யும். சென்னை, புறநகர்
பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
30 நாட்களில் முதலமைச்சராவது
எப்படி?
முப்பதே நாட்களில் முதலமைச்சராவது
எப்படி என்று ரஜினிகாந்திடம்
இருந்துதான் கற்க வேண்டும் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளில்
ரசிகர் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகளில், செயல்பாட்டாளர்களில் ஒருவர் கூடவா
உங்கள் கட்சியை ஒருங்கிணைத்து
வழிநடத்த தகுதி பெறவில்லை? என்றும்
கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.
24 குறைவு!
சென்னையில் இன்று காலை நேர
நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24
குறைந்து ரூ.37,192க்கும், கிராமுக்கு ரூ.
3 குறைந்து ரூ.4,649க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.40,232க்கும்,
கிராமுக்கு ரூ.5,029க்கும், ஒரு கிராம்
வெள்ளி விலை ரூ.67.50க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.