நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து
நடிகர் சங்க அலுவலகத்தில் தீ
விபத்து
சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா
சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில்
உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ
விபத்து ஏற்பட்டுள்ளது.

அலுவலகத்தில்
இருந்த பட்டாசில் திடீரென தீ
பற்றியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் இருந்து வந்த
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி
வருகின்றனர்.
உலகத்திலேயே இதுதான் அதிசய
குரங்கு!
இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியில்
பூங்காவில் உலகத்திலேயே சிறிய வகை
குரங்கான மார்மோசெட் எனப்படும் அரிய
வகை குக்குரங்குகள் பிறந்துள்ளன.
5
செ.மீ நீளம், 10 கிராம் எடையில் இந்த
குக்குரங்குகள் பிறந்துள்ளன. விரல் அளவு
மட்டுமே உள்ள இந்த அரியவகை அதிசய
குரங்கைக் காண பொதுமக்கள் ஆர்வமாக
உள்ளனர்.
12 மாவட்டங்களில் இடி,
மின்னலுடன் கூடிய கனமழை
தமிழகத்தின் 12 மாவட்டங்களில்
இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு
வாய்ப்புள்ளது என்று வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
செங்கல்பட்டு,
விழுப்புரம், கடலூர், பெரம்பலூர்,
அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர்,
நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில்
கனமழை பெய்யும். சென்னை, புறநகர்
பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.