நேரில் நலம் விசாரித்த முதல்வர்
நேரில் நலம் விசாரித்த முதல்வர்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள எலூரில்
250க்கும் மேற்பட்டவர்கள் திடீரென
மயங்கி விழுவதும், வாயில் நுரை
தள்ளுவதுமாக இருக்க பதறிய
மக்கள் பாதிக்கப்பட்டோரை மீட்டு
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,
பாதிக்கப்பட்டோரை முதல்வர் ஜெகன்
மோகன் ரெட்டி நேரில் சென்று நலம்
விசாரித்துள்ளார்.
397 ஆண்டுகளுக்கு பின் அரிய
நிகழ்வு
கோள்களின் இயக்கத்தில் மிக அரிய
நிகழ்வு டிச.21-ம் தேதி நடைபெறும் என்று
பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. டிச.
21-ல் வியாழன், சனி ஆகிய இரு பெரிய
கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் மிக
அருகில் சந்திக்க உள்ளன.
இதேபோன்ற
நிகழ்வு கடைசியா 1623-ம் ஆண்டில்
நடந்தது. கிரேட் கஞ்சங்ஷன் என்று
அழைக்கப்படும் இந்நிகழ்வின் போது
இருகோள்களும் ஒரே பெரிய நட்சத்திரம்
போல் பிரகாசமாக தெரியும்.
நடிகர் சங்க அலுவலகத்தில் தீ
விபத்து
சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா
சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில்
உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ
விபத்து ஏற்பட்டுள்ளது.
அலுவலகத்தில்
இருந்த பட்டாசில் திடீரென தீ
பற்றியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் இருந்து வந்த
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி
வருகின்றனர்.
.