விஜய் சேதுபதியும் நடிக்கும் பிரபல இயக்குனர்
விஜய் சேதுபதியும் நடிக்கும்
பிரபல இயக்குனர்
மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்ததை
தொடர்ந்து, மாமனிதன், லாபம், துக்ளக்
தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர்
உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து
வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில்,
யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில்
பிரபல இயக்குனர் மகிழ் திருமேணி
நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திலும்
விஜய் சேதுபதி வில்லன் என்றும் மேகா
ஆகாஷ் ஹீரோயின் என்றும் தகவல்
வெளியாகியுள்ளது.
நடராஜனை புகழ்ந்த பாண்ட்யா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20
போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
பெற்றது. ஆட்ட நாயகன் விருது பெற்ற
ஹர்திக் பாண்ட்யா, நான் நடராஜன்தான்
ஆட்ட நாயகன் விருது பெறுவார் என்று
எதிர்பார்த்தேன்.
ஏனென்றால் களத்தில்
பந்து வீச்சாளர்கள் திணறுகின்றனர்.
ஆனால், அவர் இயல்பாகவே சிறப்பாக
விளையாடி வருகிறார். அவருக்கு நல்ல
எதிர்காலம் காத்திருக்கிறது” என்று
நடராஜனை புகழ்ந்து பேசியுள்ளார்.
அஜித்தின் வலிமை வெளியீடு:
ரசிகர்கள் உற்சாகம்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்
நடித்து வரும் ‘வலிமை’படம் ஏப்ரல்
மாதம் வெளியாகும் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளது.
படப்பிடிப்புகள்
85% நிறைவடைந்து, எடிட்டிங் பணிகள்
நடைபெற்று வருவதாக படக்குழு
தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால்
அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
.