Just In: டிச.8-ல் பாரத் பந்த்! முடங்கப் போகிறது தேசம்…
Just In: டிச.8-ல் பாரத் பந்த்!
முடங்கப் போகிறது தேசம்…
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய
5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது. டிச., 9-ல் அரசு தன்
நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும்,
அதற்குள் விவசாய பிரதிநிதிகளுக்குள்
ஆலோசனை செய்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும்
விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அறிவித்தபடி டிச.8-ம் தேதி
நாடு தழுவிய `பாரத் பந்த்’ நடைபெறும்
என்றும் அறிவித்துள்ளனர்.
வீட்டிலே செய்யலாம் கற்றாழை
ஷாம்பூ
கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சோப்பை
தண்ணீரில் உருக காய்ச்சுங்கள். பின்
தோல் நீக்கிய கற்றாழை சதைகளை
மைய அரைத்து, ஆறிய பின், சோப்பு
தண்ணீருடன் சேர்க்கவும்.
அதனுடன்
ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் இ
எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
கலக்கவும். வீட்டிலே செய்த கற்றாழை
ஷாம்பூ தயார்.
பச்சை பட்டாணியில் இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதா?
பச்சை பட்டாணி சத்துகள் நிறைந்தது.
நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து மிகுந்த
பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து,
செம்பு, துத்தநாகம், பொட்டாசியம்,
பாஸ்பரஸ், மாங்கனீஸ், மக்னீஷியம்
போன்ற கனிமச் சத்துகளும் உண்டு.
வாயுக் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சீசன்
சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த
பட்டாணியை இரவு முழுவதும் நீரில்
ஊறவைத்து சமையலில் பயன்படுத்த
வேண்டும்.