இன்று முதல் இலவச உணவு – அரசு அறிவிப்பு

இன்று முதல் இலவச உணவு –
அரசு அறிவிப்பு

சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு
இன்று முதல் டிசம்பர் 13 வரை இலவச
உணவு வழங்க முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். 5.3 லட்சம் குடும்பம்
உள்ள நிலையில், சமுதாய நலக்கூடங்கள்,
அம்மா உணவகங்கள் மூலம் குடிசையில்
வசிக்கும் 23 லட்சம் பேருக்கும் உணவு
வழங்க திட்டமிட்டுள்ளது.

இப்பணி முழு
வீச்சில் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பற்களில் மஞ்சள் கறை நீங்க…

பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய்
எண்ணெய் -1 ஸ்பூன், ஆப்பிள்
சீடர் வினிகர் – 1 ஸ்பூன், எலுமிச்சை
சாறு 1 ஸ்பூன், டூத் பேஸ்ட் – 1
ஸ்பூன் ஆகியவற்றை பேஸ்ட் போல்
கலந்துகொள்ளவும்.

அலுமியத்தாள்
ஒன்றை விரித்து அவற்றில் பரப்பியவாறு
வைக்கவும். அதை பற்களை சுற்றிலும்
ஒட்டிவிட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து
பிரஷ்ஷால் தேய்த்துவிட்டு வெந்நீரில்
கொப்பளித்தால் கறை குறைந்திருக்கும்.

2வது டி20 போட்டி – இன்று
வெல்லுமா இந்திய அணி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான
2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று
பிற்பகல் நடைபெறுகிறது. சிட்னியில்
பகல் 1.40 நடைபெறும் போட்டியில்
வென்று தொடரை வெல்ல இந்திய அணி
முனைப்புடன் செயல்படவுள்ளது.

3போட்டிகள் கொண்ட போட்டியில் இந்திய
அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில்
உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami