இளையராஜாவுடன் கைகோர்த்த வெற்றிமாறன்
இளையராஜாவுடன் கைகோர்த்த
வெற்றிமாறன்
“அசுரன்” படத்தை தொடர்ந்து இயக்குநர்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில்
உருவாகவுள்ள புதிய படத்திற்கு
இசைஞானி இளையராஜா இசையமைக்க
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வெற்றிமாறன் படங்களுக்கு
ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ்
நாராயணன் இசையமைத்த நிலையில்,
முதல் முறையாக இளையராஜாவுடன்
இணைந்துள்ளார்.
விஜயை இயக்கப்போவது யார்?
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும்
65வது படத்தை நெல்சன் இயக்க
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பா.ரஞ்சித் விஜயை வைத்து
ஒரு சூப்பர் ஹீரோ கதை உருவாக்க
உள்ளதாக தெரிவித்த நிலையில்,
பாண்டிராஜ். அருண்ராஜா காமராஜ், அஜய்
ஞானமுத்து ஆகியோர் பெயர்களும்
வலம் வருகிறது.
இந்நிலையில் விஜயை
சூப்பர் ஹீரோவாக பார்க்க எதிர்பார்ப்புகள்
அதிகரித்துள்ளது.
BREAKING: தமிழக முதல்வர்
பழனிசாமி அதிரடி உத்தரவு!
புரெவி புயல், கனமழையால் இறந்த 7
பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்
வழங்க முதல்வர் ஈபிஎஸ் அதிரடியாக
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்,
புயல் மற்றும் மழையால் இறந்த மாடு
ஒன்றுக்கு ரூ.30,000, எருதுக்கு ரூ.25,000,
கன்றுக்கு ரூ.16,000, ஆடுக்கு ரூ.3,000
நிவாரண உதவி வழங்கப்படும் என்றும்
அறிவித்துள்ளார்.
.