முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற
மத்திய பாஜக அரசிடம் முதல்வர்
வலியுறுத்த வேண்டும் என்று திமுக
தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று
ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர்
பழனிசாமி வாய் திறக்கவில்லை
என்றும், முதல்வரால் விவசாயிகளுக்கும்
பயனில்லை, மக்களுக்கும் பயனில்லை
என்றும் விமர்சித்துள்ளார்.

ஃப்ரீ… ஃப்ரீ…. செம அறிவிப்பு

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்
இந்திய மக்களிடையே தங்களின் ஓடிடி
தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில்
இன்று மற்றும் நாளை இலவச சேவையை
வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த
சேவையை பெற வேண்டும் என்றால்
https://www.netflix.com/in/StreamFest
என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கான
ப்ரொபைலை அந்த தளத்தில் உருவாக்கி,
நெட்ஃபிளிக்ஸில் இடம்பெற்றுள்ள
திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள்
உள்ளிட்டவற்றை இலவசமாக
கண்டுகளிக்கலாம்.

ஆன்லைன் விளையாட்டுமத்திய அரசு அதிர்ச்சி

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு
மத்திய அரசு தடை விதிக்கும் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்துள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன்விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்கமுடியும். ஆன்லைன் விளையாட்டுவருமானத்துக்கான வழி, வேலைவாய்ப்புக்கான மாற்று என விளம்பரம் செய்யக்கூடாது. விளம்பரம் செய்யும் மொழியில் எச்சரிக்கையும் வெளியிட வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் வரும்15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami