காந்தி வழியில் ரஜினி
காந்தி வழியில் ரஜினி
காந்திதான் முதலில் ஆன்மீக
அரசியல் பற்றி பேசினார், தற்போது
ரஜினி பேசுகிறார் என்று தமிழருவி
மணியன் தெரிவித்துள்ளார். புரிதல்
இல்லாமல் இருந்தபோது ரஜினியை
விமர்சிப்பதாகவும், பின்னர்
புரிந்து மாற்றிக்கொண்டதாகவும்
தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சி ஆரம்பித்த
பிறகு தனது காந்திய மக்கள் இயக்கத்தை
அதனுடன் இணைக்கப்போவதாகவும்
தெரிவித்துள்ளார்.
விடுதலை விவகாரத்தில் சிறப்பு
சலுகை கிடையாது!
விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு
எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படாது
என்று கர்நாடக உள்துறை அமைச்சர்
பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்
சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு
பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 ஆம்
ஆண்டு சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 கோடி
அபராதம், சிறப்பு நீதிமன்றத்தில் அவரது
சார்பாக அண்மையில் செலுத்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுடன் கைகோர்த்த
வெற்றிமாறன்
“அசுரன்” படத்தை தொடர்ந்து இயக்குநர்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில்
உருவாகவுள்ள புதிய படத்திற்கு
இசைஞானி இளையராஜா இசையமைக்க
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை வெற்றிமாறன் படங்களுக்கு
ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ்
நாராயணன் இசையமைத்த நிலையில்,
முதல் முறையாக இளையராஜாவுடன்
இணைந்துள்ளார்.
.