பாஜக TRS எல்லா கட்சியையும் காட்டிலும் ஹைதராபாத்தில் புது சாதனை படைத்த கம்யூனிஸ்ட்கள்…!!!
பாஜக TRS எல்லா கட்சியையும் காட்டிலும் ஹைதராபாத்தில் புது சாதனை படைத்த கம்யூனிஸ்ட்கள்…!!!
மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக நேற்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது இதில் TRS 56, BJP 49 AIMIM 43 காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றன, ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஒரு பகுதியாக ஹைதராபாத் மாநகராட்சி இருந்த போது அதிக இடங்களை வென்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தற்போது எந்த வார்டிலும் வெற்றிபெறவில்லை.
பாஜக கடந்த முறை 4 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 49 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது, ஒவைசியின் AIMIM கட்சி போட்டியிட்ட 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்று கடந்தமுறையை காட்டிலும் ஒரு இடம் குறைவாக பெற்று தனது ஆதரவை தக்கவைத்து கொண்டுள்ளது, ஆளும் கட்சியான TRS கட்சி தனி பெரும் கட்சியாக 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்ற அதே இரண்டு இடங்களை மீண்டும் தக்கவைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் இப்படி இருக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் புது சாதனை படைத்துள்ளன,24 மணி நேர நீண்ட தேடலுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்கு ஒருவழியாக கண்டுபிடிக்கபட்டது, அதாவது 21 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிட்ஸ்கள் 21 இடங்களிலும் படு தோல்வி அடைந்துள்ளன, அதிலும் பாதி இடங்களில் 100 வாக்குகள் கூட பெறமுடியாத அளவு சுயேட்சைகளை காட்டிலும் படு மோசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட்கள் பெற்ற வாக்குகள் என்னவென்று எந்த ஊடகங்களும் முழுமையாக கண்டறியமுடியவில்லை அந்த அளவிற்கு 1% வாக்குகளை கூட கம்யூனிஸ்ட் கட்சிகளால் பெறமுடியவில்லை, மக்கள் வெறுத்து ஒதுக்கும் கட்சியாக கம்யூனிஸ்ட்கள் மாறியிருக்கின்றன. மேலும் போட்டி போடுவதற்கு வேட்பாளர்கள் கூட கிடைக்காத நிலைக்கு அந்த கட்சி சென்றுள்ளது.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வி அடைந்த கட்சி என்ற சாதனையை கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்றுள்ளன, தங்கள் கட்சியை வளர்ப்பதற்கு பதில் ஊடகங்களில் எப்போதும் பாஜகவை விமர்சனம் செய்வதிலேயே காலத்தை கம்யூனிஸ்ட்கள் கடத்தி வருவதால் தற்போது மெகா தோல்வியை கம்யூனிஸ்ட்கள் பெற்றுள்ளதாக அக்கட்சியை சேர்ந்தவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.