தலைகீழாக மாறிய ஹைதராபாத் தேர்தல் நிலவரம் காரணம் என்ன?தலைகீழாக மாறிய ஹைதராபாத் தேர்தல் நிலவரம் காரணம் என்ன?

தலைகீழாக மாறிய ஹைதராபாத் தேர்தல் நிலவரம் காரணம் என்ன?தலைகீழாக மாறிய ஹைதராபாத் தேர்தல் நிலவரம் காரணம் என்ன?

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுடன் வெளியாக தொடங்கின, தொடக்கத்தில் அரசு அதிகாரிகள், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக 88 வார்டுகள் வரை முன்னிலை வகித்தது TRS மற்றும் AIMIM கட்சி பின்தங்கியது.

தபால் ஓட்டிகளுக்கு பிறகு, முதன்மை வாக்குகள் எண்ணப்பட்டன, EVM எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இரண்டாவது சுற்று முடிவுகள் மொத்தமாக மாற தொடங்கியுள்ளன,1.20 PM நிலவரப்படி பாஜக -22, TRS – 57, AIMIM – 31, காங்கிரஸ் -03 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன, தற்போதைய சூழலில் 113 இடங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியான நிலையில் 37 இடங்களுக்கு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

பல இடங்களின் பாஜக மற்றும் TRS கட்சிகளுக்கு இடையே 20 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசங்கள் உள்ளன, கடந்த முறை பாஜக ஹைதராபாத் மாநகராட்சியில் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று இருந்தது, இந்த முறை தற்போதுவரை-22 இடங்களில் முன்னிலை வகிப்பது அந்த கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக உள்ளது என அம்மாநில பாஜகவினர் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் கடைசி ஒரு மணி நேரத்தில் 10% வாக்குகள் பதிவானது கள்ளவாக்குகள் எனவும் இதன் மூலம் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமதி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன, முழுமையான முடிவுகள் தெரிய மாலை 3-6 மணி வரை ஆகலாம் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami