விஷால், ஆரியாவை எதிரிகளாக்குவதில் வருத்தம்!

விஷால், ஆரியாவை
எதிரிகளாக்குவதில் வருத்தம்!

‘சார்பேட்டா பரம்பரை’ படத்திற்கான
ஆர்யாவின் உடலைமைப்பை பற்றி
விஷால் ட்விட்டரில் பாராட்ட, அதற்கு
பதிலளித்த ஆர்யா, விஷால் எப்போதும்
தன்னை விட 10 படிகள் முன்னே
இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நட்புபாராட்டிக் கொள்வதை பார்த்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ‘இப்படிப்பட்ட நண்பர்களை தான் நான் என் படத்தில் எனிமிகளாக காட்ட உள்ளேன்’ எனட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிக்கும் எனிமி படத்தில் ஆர்யா
வில்லனாக நடிக்க உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு முதல்வர் கடிதம்

கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான
நிதியை உடனடியாக விடுவிக்க
வேண்டும் என்று பிரதமர் நரேந்திர
மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எழுதியுள்ளார்.

உயர்கல்விக்காக
தமிழக அரசு செலவிடும் ரூ.2,110
கோடி ரூபாயில், மத்திய அரசு ரூ.
584 கோடி மட்டுமே அளித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளார். கல்வி உதவித் தொகை
60% பங்களிப்பை மத்திய அரசு வழங்க
கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகமே கருப்புக் கடல்
ஆகட்டும்!

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக
டெல்லியில் விவசாயிகள் தொடர்
போராட்டம் நடத்தி வரும் நிலையில்
திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகமே
கருப்புக் கடல் ஆகட்டும்; டெல்லி போல
குலுங்கட்டும்.

வேளாண் சட்டங்களுக்கு
எதிராக விவசாயிகளின் உரிமை காக்கும்
ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்” என்று
தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami