ரிசெர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..

ரிசெர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..

வட்டி குறைப்பு இல்லை- ஆர்பிஐ
ஆளுநர் அறிவிப்பு

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ
வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல்
4%ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி
ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக
அறிவித்துள்ளார்.

இதனால், வாகனம்
மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில்
மாற்றம் இருக்காது. மேலும், 2021 இல்
நாட்டில் பொருளாதார வளர்ச்சி
7.5%ஆக இருக்கும். வளர்ச்சி நடப்பு
நிதியாண்டின் 3வது காலாண்டில் +0.1%,
4வது காலாண்டில் +0.7%ஆக இருக்கும்.
வருங்காலங்களில் நகர்ப்புறங்களில்
தேவை அதிகரிக்கும் எனவும்
தெரிவித்துள்ளார்.

தனியார் பாதுகாப்பு போதும்

காவல்துறை பாதுகாப்பு
வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை
வைத்துக்கொள்வதாகவும் ஜெ தீபா
சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபா, தீபக்
இருவருக்கும் பாதுகாப்பளிக்க
காவல்துறை தயாராக உள்ளதாகவும்,
அதற்கு முன்பணமாக இருவரும் சேர்ந்து
6 மாதத்திற்கு 20.83 லட்சம் செலுத்து
வேண்டும் என்று ஏற்கெனவே கூறியதை
சுட்டிக்காட்டிய நிலையில், காவல் துறை
பாதுகாப்பை நிராகரித்துள்ளனர்.

தங்கம், வெள்ளி விலையில்
மாற்றமில்லை!

சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
மாற்றமின்றி ரூ.37,248-க்கும்,
கிராமுக்கு ரூ.4,656-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,288-க்கும், கிராம் ரூ.
5,036-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு ரூ.67.50-க்கும், கிலோ
வெள்ளி ரூ.67,500-க்கும் விற்கப்படுகிறது.

இன்றைய போட்டிகள்…

*முதல் டி20: இந்தியா – ஆஸ்திரேலியா –
மதியம் 1.40 மணி – கான்பெர்ரா. *முதல்
ஒருநாள்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து
மாலை 4.30 மணி – கேப்டவுன். *முதல்
டெஸ்ட் 2-வது நாள்: நியூசிலாந்து –
வெஸ்ட் இண்டீஸ் – அதிகாலை 3.30 மணி

 • ஹாமில்டன்.
  *ISL: சென்னையின் எஃப்சி – பெங்களுரு
  எஃப்சி – இரவு 7.30 மணி – கோவா.
  *LPL: கொழும்பு கிங்ஸ் – ஜஃப்னா
  ஸ்டால்லியன்ஸ் – இரவு 7 மணி.
  5:30 AM Today |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami