ரஜினிக்கு கட்சி அலுவலகம் தயார்!

ரஜினிக்கு கட்சி அலுவலகம்
தயார்!

அரசியல் கட்சி தொடங்குவதை
ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்து
விட்டநிலையில், சென்னை
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், தமிழருவி மணியனுக்கும்,
அர்ஜுனமூர்த்திக்கும் தனித்தனி
அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி
துவக்குவதற்கான அடுத்தக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்திய அணி அபார வெற்றி!

கான்பெரா நகரில் ஓவல் மைதானத்தில்
நடைபெற்று வரும் ஆஸி.,வுக்கு எதிரான
முதல் டி20 போட்டியில் இந்திய அணி
11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20
ஓவர்களில் 161/7 ரன்கள் எடுத்தது.

சற்று
கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்.,
அணி 20 ஓவர்களில் 150/7 மட்டுமே
எடுத்து தோல்வியடைந்தது. இந்திய
அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல்
51, ஜடேஜா 44 ரன்கள் எடுத்தனர்.
சாஹல், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை
கைப்பற்றினர்.
Posted

அடுத்த 6 மணி நேரத்திற்கு-புதிய
எச்சரிக்கை அறிவிப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த
6 மணி நேரத்திற்கு மழை தொடரும்
என்று சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.

சென்னை, தூத்துக்குடி,
நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம்,
சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி
உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை
தொடரும். எனவே, மக்கள் பாதுகாப்பாக
வீட்டில் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami