JUSTIN: ரஜினியை சீண்டிய முதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்!
JUSTIN: ரஜினியை சீண்டிய
முதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்!
ரஜினி கட்சி தொடங்குவது குறித்து
நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு
வெளியிட்டதை அடுத்து நாடு முழுவதும்
ரஜினி அலை வீசிக்கொண்டிருக்கிறது.
ரஜினிக்கு அரசியல் தலைவர்களும்
திரையுலக பிரபலங்களும் வாழ்த்து
சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில்,
முதல்வர் பழனிசாமி, ரஜினி முதலில்
கட்சியை பதிவு செய்கிறாரா என
பார்ப்போம். அதற்குப் பிறகு நான்
அவர் அரசியல் வருகை குறித்து
கருத்து சொல்கிறேன்” என அதிரடியாக
கூறியுள்ளார்.
ரஜினிக்கு கட்சி அலுவலகம்
தயார்!
அரசியல் கட்சி தொடங்குவதை
ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்து
விட்டநிலையில், சென்னை
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா
மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும்
பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில், தமிழருவி மணியனுக்கும்,
அர்ஜுனமூர்த்திக்கும் தனித்தனி
அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி
துவக்குவதற்கான அடுத்தக்கட்ட பணிகள்
மும்மரமாக நடைபெற்று வருவதால் ரஜினி
ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்திய அணி அபார வெற்றி!
கான்பெரா நகரில் ஓவல் மைதானத்தில்
நடைபெற்று வரும் ஆஸி.,வுக்கு எதிரான
முதல் டி20 போட்டியில் இந்திய அணி
11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20
ஓவர்களில் 161/7 ரன்கள் எடுத்தது.
சற்று
கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்.,
அணி 20 ஓவர்களில் 150/7 மட்டுமே
எடுத்து தோல்வியடைந்தது. இந்திய
அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல்
51, ஜடேஜா 44 ரன்கள் எடுத்தனர்.
சாஹல், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை
கைப்பற்றினர்.
Posted
.