இந்திய அணி அபார வெற்றி!
இந்திய அணி அபார வெற்றி!
கான்பெரா நகரில் ஓவல் மைதானத்தில்
நடைபெற்று வரும் ஆஸி.,வுக்கு எதிரான
முதல் டி20 போட்டியில் இந்திய அணி
11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20ஓவர்களில் 161/7 ரன்கள் எடுத்தது.

சற்றுகடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்., அணி 20 ஓவர்களில் 150/7 மட்டுமே
எடுத்து தோல்வியடைந்தது. இந்திய
அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல்
51, ஜடேஜா 44 ரன்கள் எடுத்தனர்.
சாஹல், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்த 6 மணி நேரத்திற்கு-புதிய
எச்சரிக்கை அறிவிப்பு
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த
6 மணி நேரத்திற்கு மழை தொடரும்
என்று சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.
சென்னை, தூத்துக்குடி,
நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம்,
சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி
உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை
தொடரும். எனவே, மக்கள் பாதுகாப்பாக
வீட்டில் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
JUST IN:பிரபல தமிழ்
நடிகையின் கணவர் காலமானார்
- சோகம்
பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர்
கணேஷ் திருச்சியில் இன்று காலமானார்.
உடல்நலக்கோளாறு காரணமாக அவர்
காலமானதாக கூறப்படுகிறது.
ஜெயசித்ரா
‘குறத்தி மகன்’ படத்தில் குழந்தை
நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி,
குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என
பல பரிணாமங்களில் தடம் பதித்தவர்.
அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.