செம்ம ட்விஸ்ட் TRS * பாஜக என இரண்டு கட்சிகளுமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன ! இதோ முழு தேர்தல் முடிவுகள்!!
செம்ம ட்விஸ்ட் TRS * பாஜக என இரண்டு கட்சிகளுமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன ! இதோ முழு தேர்தல் முடிவுகள்!!
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது . ஐதராபாத் மொத்தமுள்ள 150 வார்டுகளுக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பழைய மலக்பேட் வார்டுக்கு மட்டும் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 150 வார்டுகளிலும் 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது.
இதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிய சமிதி, அசாதுதீன் ஓவைசியின் AIMIM, பாஜக, காங்கிரஸ் இடையே நான்கு முனை போட்டி நிலவியது. காலையில் முன்னிலையில் பாஜகவும் 2 மணிக்குமேல் TRS கட்சியும் மாறி முன்னிலை வகித்தன.
ஆனால் நேரம் செல்ல செல்ல முடிவுகள் எந்த கட்சிக்குமே ஆதரவாக அமையவில்லை.

மொத்தம் தேர்தல் நடந்த 150 வார்டுகளில் 76 இடங்களை பெற்ற கட்சிதான் மேயராக வெற்றி பெற முடியும் இந்நிலையில் கடந்த தேர்தலின் போது TRS கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றது, ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, தற்போதைய நிலவரப்படி TRS -56, BJP -47, AIMIM -41 இடங்களிலும் காங்கிரஸ் – 02 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
எனவே TRS கட்சியால் தனி பெரும்பான்மை பெற முடியவில்லை இந்நிலையில் தெலுங்கனா ராஷ்டிரிய சமதி கட்சியை வீழ்த்தியதாக பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதே நேரத்தில் அதிக இடங்களை கைப்பற்றி முதன்மை கட்சியாக வந்ததால் TRS கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாநகராட்சி தேர்தலில் 4 இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது 47 இடங்களில் முன்னிலை வகிப்பது அக்கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக தெலுங்கு ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.