ரஜினி கட்சியின் பெயர் என்ன வெளியான முக்கிய தகவல்!!! அதிரடியா இருக்கே!!!!

ரஜினி கட்சியின் பெயர் என்ன வெளியான முக்கிய தகவல்!!! அதிரடியா இருக்கே!!!!

நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. 2017 டிசம்பர் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர் தீவிர அரசியல் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார்.
ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. ஆனாலும், அரசியல் கட்சியைத் தொடங்காமல் அறிவிப்பு வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த நவ.30 அன்று ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளைக் கேட்டார்.

இந்தக் கூட்டத்தில் தனது உடல் நிலை, நேரடி அரசியலில் ஈடுபட முடியாத நிலை, அரசியல் கட்சியைத் தொடங்குவதா? உடல்நிலையைப் பார்ப்பதா? அரசியல் கட்சிகளின் நண்பர்கள் அழைப்பை ஏற்று வாய்ஸ் கொடுக்கலாமா? அல்லது மவுனமாக இருக்கலாமா? ஆகியவை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
உடல்நிலை முக்கியம் எனவும், ஆனாலும் அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து ரஜினியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியில், “மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நானும் என்னுடைய பார்வையை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று மன்ற நிர்வாகிகள் தெரிவித்தார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எனது முடிவை அறிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முடிவை ரஜினி தெரிவித்துள்ளார். அதில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிச.31 அன்று வரும் என்றும் தெரிவித்தார், அதன் பிறகு செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்த அவர் தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளதாக குறிப்பிட்டார். தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றம் நிச்சயம் உண்டாகும் எனவும் எனது வெற்றி தோல்வி மக்களுடையது எனவும் அரசியல் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், மேலும் ரஜினியின் கட்சியின் பெயர் ‘மதசார்பற்ற ஆன்மீக ஜனதாதளம்’ அல்லது ‘ஆன்மீக ஜனதா தளம்’ என்ற பெயரை ரஜினி குறித்து வைத்திருப்பதாகவும் முதன்மை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகை தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது இனி வரும் ஒவ்வொரு நாளும் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் உண்டாகலாம் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami