டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் பிறந்தநாள் இன்று

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத்
பிறந்தநாள் இன்று

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும்,இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் பிறந்த தினம் இன்று.

இரு முறை குடியரசுத்
தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரே தலைவர் என்ற பெருமைக்குரியவர்.
இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்
டிவிட்டரில் மரியாதை செலுத்தி
வருகின்றனர். மேலும், #PresidentofIndia
டிரெண்டிங்கில் உள்ளது.

புரெவி புயல் – 12 விமான
சேவைகள் ரத்து

புரெவி புயல் இலங்கையை கடந்து
பாம்பன் அருகே நிலைகொண்டுள்ளது.
இது கரையை கடப்பதன் காரணமாக
சென்னை, தூத்துக்குடிக்கு இரு
மார்க்கமாக செல்லும் 3 விமானங்கள்
உட்பட தென்மாவட்டங்களுக்கு
செல்லும் 12 விமான சேவைகள் ரத்து
செய்யப்பட்டுள்ளன.

மழை அளவைப்
பொருத்து நாளை அறிவிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

FlashNews: புரெவி புயல் அலர்ட்
விடுமுறை அறிவிப்பு…

புரெவி புயல் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக காரைக்காலில்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு
அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜூன்
தர்மா விடுமுறை அறிவித்துள்ளார்.

காரைக்காலில் 9 முதல் 12-ம் வகுப்பு
மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள்
நடந்து வரும் நிலையில், தற்போது புயல்
காரணமாக கனமழை பெய்து வருவதால்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami