முதல் நாள் தீவிரமாக களத்தில் இறங்கிய பாமக மறுநாள் ரூட்டை மாற்றியது ஏன் இது ஒன்றுதான் காரணம்!!!
முதல் நாள் தீவிரமாக களத்தில் இறங்கிய பாமக மறுநாள் ரூட்டை மாற்றியது ஏன் இது ஒன்றுதான் காரணம்!!!
பாமக சார்பில் வன்னியர் சமுதாயத்திற்கு 20% தனி ஒதுக்கீடு வழங்கவேண்டும் என அக்கட்சி டிசம்பர் முதல் போராட்டம் தொடங்கும் என்றும் ஜனவரியில் போரட்டம் உச்சகட்ட நிலையை அடையும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார், மேலும் இணையம் மூலம் கூடிய பாமக பொதுக்குழுவிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பாமக சார்பில் டிசம்பர் 1 ம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையை முற்றுகையிட தீர்மானிக்கப்பட்டு சென்னையை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்கள் மூலம் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுத்தனர், பாமகவினர் வருகையை முன்பு கணித்த தமிழக காவல்துறை சென்னையின் நுழைவாயிலான பெருங்களத்தூர் பகுதியில் பாமகவினரை தடுத்து நிறுத்தினர்.
அதன் பிறகு போக்குவரத்து பாதிப்பு, சாலை மறியல், ரயில் மீது தாக்குதல் என பாமகவினர் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது, இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் மீண்டும் சாதி மோதல்கள் உண்டாகும் என உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராட்டத்தை ஒருங்கிணைத்த பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது வன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பது குறித்து அன்புமணி கூறிய கருத்துக்களை முதல்வர் துணை முதல்வர் இருவரும் அமைதியாக கேட்டனர், அன்புமணியுடன், பாமக தலைவர் GK மணியும் உடன் இருந்தார், அன்புமணி பேசிய பிறகு பதில் கொடுத்த முதல்வர் பழனிசாமி போராட்டம் நடத்துவது சரியான நோக்கம் அதை அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சரியாக இருக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் வன்னியர் சமுதாயம் 13-15% இருப்பதாக சுட்டிக்காட்டிய தகவல் மேலும் மஹாராஷ்டிராவில் மராட்டா 99 குலின் சாதிகள் 30% இருக்கிறார்கள் அவர்களுக்கு அம்மாநில அரசு 16% இட ஒதுக்கீடு வழங்கியது கிட்டத்தட்ட சரிபாதி அளவில் எனவே வன்னியர் வாக்குகள் அதிகபட்சம் 15 % என வைத்துக்கொண்டாலும் 10% தனி ஒதுக்கீடு மட்டுமே தரமுடியும்.
சரி வன்னியர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறது என வைத்து கொண்டால் முழுமையாக ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தி அவற்றின் அடிப்படையில் மட்டுமே ஒரு நிரந்தர தீர்விற்கு வரமுடியும் இது தான் இப்போதைய அரசு நிலைப்பாடு, பாஜக நடத்திய வேல் யாத்திரையில் அசம்பாவிதம் ஏற்படும் என்ற காரணித்தினால் முன் கூட்டியே வேல் யாத்திரைக்கு தடை விதித்தோம்.
ஆனால் நீங்கள் முதல் நாளிலேயே களவரத்தில் ஈடுபடும் போக்கில் செயல்படுவது டெல்லிவரை அனைத்து மீடியாக்களிலும் எதிரொலிக்கிறது, மீண்டும் மீண்டும் ரயில் மீது கல்லெறியும் காட்சிகள் படமாக்க படுகின்றன, இது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் அமைதியான முறையில் உங்கள் போரட்டத்தை நடத்துங்கள் அரசு உங்களுக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக தலைமை செயலாளரை தொடர்புகொண்டு சட்டம் ஒழுங்கு சீர் கெடுவதற்கு 90% வாய்ப்புகள் இருக்கிறது எனவும் ரகசிய சந்திப்புகள் குறித்தும் தகவலை பரிமாறியுள்ளது, இந்த தகவல் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு சொல்லப்படவே தென் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் உடனடியாக வட மாநிலங்களில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழக அரசு பாமாவிற்கு சொல்லவருவது என்னவென்றால் ஒரு வேலை போராட்டம் கலவரமாக மாறினால், இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்குவோம் என உணர்த்திவிட்டது, மேலும் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க போரட்டம் குறித்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது, நிச்சயம் போராட்டம் நடந்த விதம் தலைநகரை பாமக முற்றுகையிட்டது குறித்து நீதிமன்றம் கண்டிக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.
ஒரே நேரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, நீதித்துறை மூன்றையும் பகைத்து கொள்ள வேண்டாம் என்ற முடிவில்தான் முதல் நாள் இருந்த போராட்ட களத்தை பாமக குறைத்துவிட்டது, முதல்நாள் களத்திற்கு சென்ற அன்புமணி இரண்டாம் நாள் செல்லவில்லை, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களையும் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ளவர்களை மட்டும் கொண்டு போராட்டத்தை நடத்த முடிவு எடுத்துவிட்டார்கள்.
தற்போது திரிசங்கு வியூகத்தில் பாமக தலைமை சிக்கியுள்ளது முன்வைத்த கால் பின்வைத்தால் தொண்டர்கள் மதிக்கமாட்டார்கள், முன்னே நோக்கி போராட்டத்தை தொடர்ந்தால் மிக பெரும் எதிர்ப்பை அனைத்து தரப்பிலும் எதிர்கொள்ளவேண்டிவரும் எனவே என்ன செய்வது என தெரியாமல் பாமக தலைமை தற்போது அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளதாம்.