JustIn: ‘கடும் குளிரில் வீதியில் கிடந்து’ – உருகிய நடிகர் கார்த்தி
JustIn: ‘கடும் குளிரில் வீதியில்
கிடந்து’ – உருகிய நடிகர் கார்த்தி
மத்திய அரசின் வேளாண்
மசோதாக்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்து டெல்லியில் போராடி
வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக
நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.

“டெல்லி குளிரையும் பொருட்படுத்தாமல்
வீதியில் கிடந்து போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள்கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.அரசு தாமதிக்காமல் இதை வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என டுவீட் செய்துள்ளார்.
உயர்த்திய குரமங்கலம் காவல்
Top10PoliceStation – முதல்வர்
ஈபிஎஸ் பெருமிதம்
இந்தியாவில் மிகச் சிறப்பாகச் செயல்படும்
Top10PoliceStation பட்டியலில் சேலம்
மாவட்டம் சூரமங்கலம் காவல்நிலையம்
2-வது இடம் பிடித்திருப்பது மிகுந்த
மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது
என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய
அளவில் தமிழகத்தின் பெருமையை
உயர்த்திய சூரமங்கலம் காவல்
நிலையத்திற்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
தடை நீங்கியது… ‘கன்னிராசி’
நாளை வெளியீடு!
விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்
உருவாகி இருக்கும் கன்னிராசி
படத்திற்கான தடை நீங்கியதால், நாளை
முதல் ரிலீசாக இருப்பதாக படக்குழு
அறிவித்துள்ளது.
இப்படத்தின் கர்நாடக
உரிமையா வாங்கியுள்ள ‘மீடியா
டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், இப்படத்தின்
தயாரிப்பு நிறுவனமான கிங் மூவி
மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் விநியோக
உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை
வழங்கப்பட்டது. தற்போது சுமூக முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
.