கோட்டையில் என்னுடன் விவாதிக்க தயாரா?- ஆ.ராசா
கோட்டையில் என்னுடன்
விவாதிக்க தயாரா?- ஆ.ராசா
தமிழகத்தின் பட்ஜெட் அளவுக்கு
2ஜியில் திமுக ஊழல் செய்ததாக தமிழக
முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டிய
நிலையில், அது குறித்து கோட்டையில்
என்னுடன் விவாதிக்க தயாரா? என்று
ஆ.ராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த
ஜெயலலிதாவே சொத்துக்குவிப்பு
வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்தான்.இவ்வாறு அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து எடப்பாடி ஆட்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
ஆஸ்திரேலிய வீரரை நெகிழ
வைத்த கே.எல்.ராகுல்!
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள்
போட்டியில், அறிமுகமான ஆஸ்திரேலிய
வீரர் கேமரூன் கிரீன், “கே.எல் ராகுல்
ஸ்டம்பிற்கு பின்புறம் நடந்து கொண்ட
விதம், எனக்கு வியப்பளித்தது.
நான்
களமிறங்கிய போது பதட்டமாக
இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்.
நான் ‘ஆம். கொஞ்சம் பதட்டமாக
இருக்கிறது’ என்றேன். அவர் உடனே
‘சிறப்பாக விளையாடு இளம்வீரரே’
என்றார். அதை நான் என்றும் நினைவில்
வைத்திருப்பேன்” என்று பேட்டியில்
தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களுக்கு
எச்சரிக்கை
புரெவி புயல் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக, தூத்துக்குடியில் மாலை
6 மணி முதல் மக்கள் யாரும் வீடுகளை
விட்டு வெளியே வரவேண்டாம்
என்று அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்
ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கடற்கரை,
நீர்நிலைகள் அருகில் செல்லவேண்டாம்,
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள்
நிவாரண முகாம்களுக்கு செல்லுங்கள்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.