ஆஸ்திரேலிய வீரரை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்!
ஆஸ்திரேலிய வீரரை நெகிழ
வைத்த கே.எல்.ராகுல்!
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள்
போட்டியில், அறிமுகமான ஆஸ்திரேலிய
வீரர் கேமரூன் கிரீன், “கே.எல் ராகுல்
ஸ்டம்பிற்கு பின்புறம் நடந்து கொண்ட
விதம், எனக்கு வியப்பளித்தது.

நான்
களமிறங்கிய போது பதட்டமாக
இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்.
நான் ‘ஆம். கொஞ்சம் பதட்டமாக
இருக்கிறது’ என்றேன். அவர் உடனே
‘சிறப்பாக விளையாடு இளம்வீரரே’
என்றார். அதை நான் என்றும் நினைவில்
வைத்திருப்பேன்” என்று பேட்டியில்
தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களுக்கு
எச்சரிக்கை
புரெவி புயல் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக, தூத்துக்குடியில் மாலை
6 மணி முதல் மக்கள் யாரும் வீடுகளை
விட்டு வெளியே வரவேண்டாம்
என்று அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்
ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கடற்கரை,
நீர்நிலைகள் அருகில் செல்லவேண்டாம்,
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள்
நிவாரண முகாம்களுக்கு செல்லுங்கள்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு துரோகம்
இழைக்காதீர்கள்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட
ஆறு மாநில விவசாயிகள் டெல்லி
எல்லைகளில் தொடர்ந்து போராட்டம்
நடத்தி வருகின்றனர். இன்றுடன்
இந்தப் போராட்டம் 8வது நாளை
எட்டியுள்ளநிலையில் அரசு 4ம் கட்டப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்நிலையில், “வேளாண் சட்டங்களை
ரத்து செய்யாவிட்டால் அது
விவசாயிகளுக்கும் இந்தியாவிற்கும்
செய்யும் துரோகம்” என ராகுல் காந்தி
விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.