நவம்பர் 30 பிரதமரின் பயணத்திட்டம் வெளியானது

நவம்பர் 30 அன்று வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆறு வழிச் சாலையாக விரிவாக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 19-இன் வாரணாசி (ராஜாதலாப்)-பிரயாக்ராஜ் (ஹாண்டியா) பிரிவை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேவ் தீபாவளியில் கலந்துகொள்ளும் பிரதமர், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வழித்தட திட்டத்தையும் பார்வையிடுகிறார். சாரநாத் தொல்லியல் தளத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

ரூபாய் 2,447 கோடியில் விரிவாக்கப்பட்டுள்ள இந்த 73 கிலோ மீட்டர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை 19, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசிக்கு இடையேயான பயணத்தை ஒரு மணி நேரம் குறைக்கும்.

உலகப் புகழ்பெற்ற தீபங்களின் பண்டிகையாக மாறியுள்ள வாரணாசியில் உற்சாகமாக கொண்டாடப்படும் தேவ் தீபாவளி, கார்த்திகை மாதத்தின் பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. வாரணாசியின் ராஜ்காட்டில் விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் இவ்விழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து கங்கை ஆற்றின் இருபுறங்களிலும் 11 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும்.

இந்த பயணத்தின்போது, ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வழித்தட திட்டத்தை பார்வையிடும் பிரதமர், அதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்கிறார். இந்த மாதம் அவர் தொடங்கி வைத்த சாரநாத் தொல்லியல் தளத்தின் ஒலி-ஒளி காட்சியையும் பிரதமர் காண்கிறார்.

6 thoughts on “நவம்பர் 30 பிரதமரின் பயணத்திட்டம் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami