அமிட்ஷா வருகை யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட் இதெல்லாம் வேற ரகம் !

அமிட்ஷா வருகை யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட் இதெல்லாம் வேற ரகம் !

உள்துறை அமைச்சர் அமிட்ஷா வருகை குறித்து ஒரு வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவரது அரசியல் வருகையை பேசு பொருளாக மாற்றி அதன் மூலம் தமிழக மக்களுக்கு அமிட்ஷா சொல்லவரும் சேதியை கொண்டு சேர்ப்பது என்பதுதான் பொருள் ஏனென்றால் அவர் இதற்கு முன்னர் தமிழகம் வரும் போது எந்த தகவலும் ஒரு வாரத்திற்கு முன்னர் கொடுக்கப்பட்டது இல்லை.

அரசு விழா என்று கூறப்பட்டாலும் இது முழுக்க முழுக்க வர போகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடா ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு என்பது தெளிவாக தெரியவந்துள்ளது, இதனை உறுதி படுத்தும் விதமாக பாஜக தமிழக பொறுப்பாளர் CT ரவி நேற்றே சென்னை வருகை தந்து உள்கட்சி விவகாரம் குறித்து முழுமையாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பாஜகவில் பலர் அமிட்ஷா முன்னிலையில் இணையலாம் என்ற செய்தி தீயாக பரவி வந்த சூழலில் முன்னாள் எம். பி ராமலிங்கம் பாஜகவில் இணைந்துள்ளார், திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இவர் திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது பாஜக வேறு ஒரு ட்விஸ்ட் கொடுக்க தயாராகி வருகிறது, இன்றைய அமிட்ஷா வருகையின் போது, அவரை முதல்வர், துணை முதல்வர், அதிமுக மூத்த தலைவர்கள் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் சந்திக்க உள்ளனர், அப்போது பாஜக அதிமுக இரு கட்சிகளும் கூட்டணி குறித்து முழு ஒப்பந்தம் செய்ய தயாராகியுள்ளனவாம்.

இன்றைய சந்திப்பில் பாஜக தாங்கள் போட்டியிட உள்ள 50-60 இடங்களுக்கான பட்டியலை அதிமுகவிடம் கொடுக்க உள்ளது, மேலும் இது குறித்து அமிட்ஷா அடுத்து தமிழகம் வருவதற்குள் முடிவு செய்ய கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் வலியுறுத்த இருக்கிறதாம், இதில் மிக பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இந்த பகுதியில் அடுத்த மாதமே பாஜக வேட்பாளர்களை அறிவிக்காமல் தொகுதியில் நேரடியாக மக்களை சந்திக்க தயாராகிவிட்டதாம்.

இதற்காக RSS உறுப்பினர்கள், சங்க் பரிவார் அமைப்பினர் என சுமார் 20 ஆயிரம் பேர் 5 பகுதிகளாக அடுத்த மாதம் தமிழகம் வர இருக்கின்றனராம், அதோடு இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி முழு அளவில் தேர்தல் பணியாற்ற இருக்கிறார்களாம், இதே பார்முலாவைதான் பாஜக சமீபத்தில் பீகார் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தியது.

இந்த சந்திப்பு உள்ளாட்சி ரீதியாகவும், கிராமம் ரீதியாகவும் அமைய இருப்பதால் தற்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர், இதையடுத்துதான் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பீகார் மாதிரி தேர்தல் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு பலன் அளிக்க கூடியது என்றும் அது போன்று இனி ஒரு தேர்தலை நடத்த கூடாது எனவும் இன்று உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார் என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்.

பாஜக போட்டியிடும் தொகுதி முழுவதும் தற்போதே RSS உறுப்பினர்கள் களம் இறங்குவதும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன்பே தொகுதியில் பாஜக வியூகம் வகுத்து அதை செயல்முறை படுத்த அமிட்ஷா தமிழகம் வந்திருக்கிறார் என்ற செய்தி எதிர்கட்சி , உதிரி கட்சி என அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

இப்படி ஒரு ட்விஸ்ட்டை பலர் எதிர்பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *