தொடர் ஏற்றத்தில் பெட்ரோல், டீசல் விலை!

தொடர் ஏற்றத்தில் பெட்ரோல்,
டீசல் விலை!

சென்னையில் 2ம் நாளாக இன்றும்
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.


எண்ணெய் நிறுவனங்களின்
அறிவிப்பின்படி, நேற்றைய
விலையிலிருந்து பெட்ரோல் விலை
லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ.
84.46 ஆகவும், டீசல் விலை 20 காசுகள்
அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.37
ஆகவும் விற்கப்படுகிறது. இந்த விலை
மாற்றம் காலை 6 மணி முதல் அமலுக்கு
வந்தது.

இதை அதிகம் யூஸ் பண்ணாதீங்க
பெரும் அதிர்ச்சி!!!

கொரோனா ஊரடங்கான கடந்த 8
மாதங்களில், காதுகளில் பாதிப்பு
ஏற்படுவோரின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதாக நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பவர்கள்
உள்பட பலரும் நீண்ட நேரம்
தொடர்ச்சியாக அதிக சத்தத்துடன்
இயர்போன் பயன்படுத்துவதால்
காதுகளில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேலும், சுத்தம் இல்லாத இயர்பட்ஸ்,
இயர்பிளக்ஸ்களை பயன்படுத்தும்போது,
அது காதில் தொற்றை ஏற்படுத்தும். இந்த
பழக்கம் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும்
என்றும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் – மக்களுக்கு செம
மகிழ்ச்சி செய்தி!

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் 6
மாவட்டங்கள் கொரோனா தொற்று
இல்லாத மாவட்டங்களாக மாறக்கூடும்
என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரியலூர், தென்காசி, புதுகை, தூத்துக்குடி,
பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில்
தொற்று மிக குறைந்த அளவே
காணப்படுவதாகவும், அரசு எடுத்து வரும்
நடவடிக்கையால் இந்த மாத இறுதியில்
இந்த மாவட்டங்களில் கொரோனா
முழு கட்டுப்பாட்டுக்குள் வரும் என
கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *